விஜய்யின் தாயார் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ‘ஒரு குட்டி ஸ்டோரி ஒரு கர்நாடிக் பாட்டு’ என்ற தொடரில் பங்கேற்று வருகிறார்.
Also Read | ‘சுவாசமே சுவாசமே தேடல் இன்று… ’ SR பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் ‘O2’ first single
புது நிகழ்ச்சி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார்.
அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே.இந்நிலையில் ஷோபா சந்திரசேகர், தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தமது கர்நாடக சங்கீத பாடல்கள் சம்மந்தமாக ஒரு தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
வாரம் ஒரு குட்டி ஸ்டோரி…
இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி “ஒரு குட்டி ஸ்டோரி… ஒரு கர்நாட்டிக் பாட்டு’ என்கிற பெயரில் இன்றுமுதல் Behindwoods TV யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. முதல்வார எபிசோட்டில் தனது மகள் வித்யாவின் நினைவுநாளை விஜய் என்றும் மறக்க மாட்டார் என்பது நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
விஜய்யோடு சேர்ந்து பாடிய முதல் பாட்டு…
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் முதல் முதலாக விஜய்யோடு இணைந்து ‘விஷ்ணு’ படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் பாடிய ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’ பாடல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக பேசிய அவர் “விஜய்யோட சேர்ந்து பாடுன முதல் பாட்டு விஷ்ணு படத்துல. தேவா சார் இசைல. அந்த பாட்ட சேந்து பாடப்போறோம்னு தெரியும். ஆனால் விஜய் முதல்லயே போ பாடிட்டு ‘அம்மா நான் பாடிட்டேன்னு’ சொன்னாரு. நான் ‘என்ன விஜய் சேந்து பாடலாம்னு சொன்னாங்க… நீ போய் முன்னாடியே பாடிட்டு வந்துட்டியே’ என்று கேட்டதற்கு, அவர் ‘இல்லம்மா உங்களோட சேந்து பாடினா, எனக்கு முன்னாடி நீங்க நல்லா பாடிடுவீங்கல்ல’ என்று கூறினார். ரெண்டு பேரும் சேர்ந்து பாடின அந்த பாட்டு நல்ல ஹிட் ஆனது” என்று மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பாடலின் சில வரிகளையும் ரசிகர்களுக்காக பாடியுள்ளார்.
Also Read | ஆந்திரா & தெலங்கானாவில் மாஸ் காட்டும் கமலின் ‘விக்ரம்’… இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?