நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொள்ளும் புதிய தொடர் பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகி வருகிறது.
Also Read | BREAKING: சிவகார்த்திகேயனை இயக்கும் ‘மண்டேலா’ மடோன் அஸ்வின்… வில்லனாக பிரபல இயக்குனரா?
பிஹைண்ட்வுட்ஸ் தொடர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார்.
அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே.இந்நிலையில் ஷோபா சந்திரசேகர், தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தமது கர்நாடக சங்கீத பாடல்கள் சம்மந்தமாக ஒரு தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
கவனம் ஈர்த்த எபிசோட்கள்..
இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி “ஒரு குட்டி ஸ்டோரி… ஒரு கர்நாட்டிக் பாட்டு’ என்கிற பெயரில் மூன்று வாரங்களாக Behindwoods TV யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. முதல்வார எபிசோட்டில் தனது மகள் வித்யாவின் நினைவுநாளை விஜய் என்றும் மறக்க மாட்டார் என்பது நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். இஅரண்டாவது எபிசோட்டில் விஜய்யுடன் இணைந்து முதல்முறையாக விஷ்ணு படத்தில் இடம்பெற்ற ‘தொட்டபெட்டா’ பாடலை பாடிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மாஸ்டர் ஆடியோ வெளியீடு…
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யுடன் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டது குறித்து ஷோபா சந்திரசேகர் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “மாஸ்டர் ஆடியோ வெளியீட்டின் போது எங்களை மேடைக்கு அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. திடீர்னு அழைத்து, விஜய்யிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். எனக்கு ரொம்ப நாளாகவே விஜய்யை கட்டிப்பிடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதனால் அவரிடம் ஒரு HUG வேண்டும் எனக் கேட்டேன். விஜய் கட்டிப்பிடித்த போது தலைல இருந்து கால் வரைக்கும் ஒரு நல்ல பீலிங் இருந்தது. அதை என்னவென்று சொல்ல முடியவில்லை. விஜய் ரொம்பவும் பிஸியாக இருப்பதால் அவரை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. மாதத்துல ஒரு முறை சந்திப்போம். அல்லது போனில் பேசுவார். இப்பவும் விஜய்ய ரொம்ப மிஸ் பண்றேன். அவர் ரொம்ப கம்மியா பேசுறதால அப்படியே பழகிப்போச்சு. அவரை, அடிக்கடி பாக்க முடியல பேச முடியலங்குறத இப்போ வர மிஸ் பண்றேன்.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Also Read | ”பீஸ்ட் to விக்ரம்… எல்லாம் உங்களால்தான்… Miles to Go…” – அனிருத்தின் நெகிழ்ச்சிப் பதிவு