நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பேசும் புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
Also Read | ’ஜப்பானை அடுத்து இந்த நாடா?..’ 297 திரையரங்குகளில் இன்று வெளியாகும் கார்த்தியின் ‘கைதி’
தளபதி விஜய்…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அடுத்து விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எண்ணற்ற நட்சத்திர நடிகர்கள் அவருடன் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பெற்றோரின் பங்கு…
நடிகர் விஜய்யின் பெற்றோர்களான தயாரிப்பாளர் & பாடகி ஷோபா மற்றும் இயக்குனர் சந்திரசேகர் ஆகிய இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே.
ஷோபாவின் புது நிகழ்ச்சி…
இந்நிலையில் ஷோபா சந்திரசேகர், விரைவில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தமது கர்நாடக சங்கீத பாடல்கள் சம்மந்தமாக ஒரு தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி “ஒரு குட்டி ஸ்டோரி… ஒரு கர்நாட்டிக் பாட்டு’ என்கிற பெயரில் விரைவில் Behindwoods TV யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் பற்றி குட்டி ஸ்டோரி…
அந்த வீடியோவில் ஷோபா ‘ உங்க எல்லோருக்கும் என்ன விஜய் அம்மாவ தெரியும். ஆனா என்னோட துறை கர்நாடக சங்கீதம். இனிமே ஒவ்வொரு வாரமும் Behindwoods TV-ல என்னோட கிளாசிக்கல்ஸ் பாட்டுகளை ஒன்னொண்ணா ஒரு ஒரு வாரமும் கேக்கலாம். அதுமட்டும் இல்ல, விஜய் எப்படி உங்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்றாரோ, அதுபோல நான் உங்களுக்கு விஜய் பத்தி குட்டி ஸ்டோரி சொல்லப்போறேன்” எனக் கூறி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.
8-ஆவது Behindwoods Gold Medals விருதுகள் நிகழ்வு, இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள Island மைதானத்தில் வரும் 2022, மே 21 மற்றும் 2022, மே 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8