கமல், தனுஷ் பற்றி கன்னட ஹீரோ சிவராஜ்குமார் என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள படங்களை தொடர்ந்து ,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் விஜய் மில்டன் 'பைராகி' படத்தை இயக்குகிறார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

Vijay milton shiva rajkumar Bhairaghi movie update

கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார். வேகமாக உருவாகி வரும் இந்த  ஆக்சன் கமர்ஷியல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Vijay milton shiva rajkumar Bhairaghi movie update

இப்படம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது...

நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகன் நான். அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார்.

தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும்  மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும்.

விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து கஷ்டப்பட்டு  உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாக செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது.

மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள்.அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும் என்றார்.

விஜய் மில்டன் ஆட்டோகிராப், காதல், போஸ், சாமுராய், வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

Vijay milton shiva rajkumar Bhairaghi movie update

People looking for online information on Rajkumar, Sivarajkumar, Vijay Milton will find this news story useful.