மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா கேப்டன் விஜயகாந்த்? இயக்குனர் விஜய் மில்டன் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும்,  முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

Advertising
>
Advertising

ஒயிட் & ஒயிட்டில் கலக்கிய Priya bhavani Shankar..! பிரபல ஃபேஷன் டிசைனருடன் இணைந்து வெளியிட்ட போட்டோஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார். தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் புதிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின.  அதில் குடும்பத்தினர் உடன் விஜயகாந்த் தோன்றி இருந்தார். இந்த போட்டோக்கள் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் -2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இதுபற்றி இயக்குனர் விஜய் மில்டனை நமது பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, MPM படத்தில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் விஜயகாந்த் அவர்களின் கால்சீட் தேதிக்கான காத்திருப்பதாகவும், கால்சீட் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

Infinity film ventures இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் FDFS: ஒரு டிக்கெட் 1500 ரூபாயா? USA - ல வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Milton about Captain Vijayakanth Tamil Cinema Re Entry

People looking for online information on Captain Vijayakanth, Captain Vijayakanth Re Entry, Vijay Antony, Vijay Milton, Vijayakanth will find this news story useful.