வாரிசு படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? ரசிகர்களை சந்தித்த விஜய்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | BIGG BOSS சீசன் - 6.. எப்போ ஒளிபரப்பு? கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ!

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடுவே நடிகர் விஜய், ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | அதிர்ச்சி! மகேஷ் பாபுவின் தாயார் மரணம்.!! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.

வாரிசு படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? ரசிகர்களை சந்தித்த விஜய்! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Meet Fans at Varisu Movie Ennore Shooting Spot

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Movie Shooting, Vijay, Vijay Meet Fans will find this news story useful.