சென்னை, 22, பிப்ரவரி, 2022: தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை
இந்த தேர்தலுக்கு பின் தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வருவதை காண முடிந்தது. இதேபோல் இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் நிற்பதையும், வெற்றி பெற்று வருவதையும் காணமுடிகிறது.
விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள்..
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள், புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டிலும், விருது நகர் கொடிக்குளம் பேரூராட்சியில் 5வது வார்டிலும் என தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதை காண முடிகிறது. இதேபோல் வேலூர் 46வது வார்டிலும், சென்னை 136வது வார்டில் அறிவு செல்வி என பெண்களும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்வந்து போட்டியிட்டுள்ளனர்.
வாழ்த்து மழை..
இவற்றையெல்லாம் பார்த்து உற்சாகமான விஜய் ரசிகர்கள், தோற்கிறோம், ஜெயிக்கிறோம் என்பது இல்லை விஷயம் களத்திற்கு வந்துள்ளோம், களத்தை சந்திக்கிறோம், அதுதான் முக்கியம் என வேட்பாளர்கள் அனைவருக்குமே தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வருகின்றனர். வேறு எந்த தேர்தலில் இல்லாத அளவுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெரும் கவன ஈர்ப்பை கொடுத்துள்ளது.
பீஸ்ட் - அரபிக் குத்து
நடிகர் விஜய் நடிப்பிலான பீஸ்ட் திரைப்படம் அடுத்து விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படமாக உள்ளது. பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிருத் இசையிலான இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கொஞ்சம் கூட குறையாத craze… 7 நாளில் 7 கோடி வியூஸ்… தெறிக்கவிடும் அரபிக்குத்து பாடல்!