திடீரென வீட்டில் நடந்த துயரம்..! படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய LEO பட டெக்னீஷியன்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கேமரா மேனாக பணிபுரிந்தவர் மனோஜ் பரமஹம்சா.

Advertising
>
Advertising

தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் கேமிரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயார் சென்னையில் திடீரென உயிரிழந்த உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் மனோஜ் பரமஹம்சா, அவருடைய குடும்பத்தினர், நெருங்கிய வட்டாரத்தினர் மற்றும் திரையுலகினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் மனோஜ் பரமஹம்சாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விஜய், திரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன் மற்றும் பல நடிகர்களுடன் காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் இறந்த இந்த சூழலில், இதற்காக மனோஜ் பரமஹம்சா, சென்னை திரும்பியதாகவும் தம்முடைய வீட்டில் இறுதிச் சடங்குகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்து ஒரு சில நாட்களுக்குப் பின் அவர் மீண்டும் லியோ திரைப்பட படிப்பிற்காக காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay LEO DOP Manoj Paramahamsa mother passed away

People looking for online information on Leo, Manoj Paramahamsa, Vijay will find this news story useful.