ஜனநாயக கடமை முடிஞ்சுது.. அடுத்து ரசிகர்களுக்கான கடமை.. புறப்படும் விஜய்!.. முழு விபரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

Vijay leaving to Georgia for Thalapathy65 shoot first schedule

இதில் தலைப்பு செய்தியாகவே மாறிவிட்டார் தளபதி விஜய். காரணம் நீலாங்கரையில் தன் வீட்டுக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் பயணம் செய்ததுதான். மாஸ்க் அணிந்து கொண்டு சைக்கிளில் நடிகர் விஜய் பயணம் செய்து வாக்களித்துவிட்டு வந்தார்.

Vijay leaving to Georgia for Thalapathy65 shoot first schedule

தளபதி விஜய் ரசிகர்களை பொருத்தவரை மாஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை காண்பதற்கு ஆவலாக இருக்கின்றனர். விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 65 படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

Vijay leaving to Georgia for Thalapathy65 shoot first schedule

நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது தளபதி 65 திரைப்படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. இந்த பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின.

இந்தப் படத்தில் விஜயுடன் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்கிற செய்தியும் அண்மையில்தான் உறுதியானது. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு செய்த கையோடு நடிகர் விஜய் ஜார்ஜியாவில் நடக்கவிருக்கும் தளபதி 65 படத்துக்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு புறப்படுகிறார் என்கிற தகவல்கள் தெரியவந்துள்ளன.

அங்கு 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதற்காக விஜய் வெளிநாட்டுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ: ‘விஜய் Cycle-ல வந்ததுக்கு இதுதான் காரணம்!’.. வேற ஒன்னும் இல்ல.. கொளுத்திப் போடாதீங்க!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay leaving to Georgia for Thalapathy65 shoot first schedule

People looking for online information on Georgia, Nelson Dilipkumar, Thalapathy65, ThalapathyVijay, Trending, Vijay will find this news story useful.