ரஜினி - நெல்சன் இணையும் ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா?.. வெளியான 'சூப்பர்' தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் இணையவுள்ள ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது பற்றி நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

vijay kartik kannan to be cameraman for jailer movie sources
Advertising
>
Advertising

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்த நிலையில், ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமான கதைக் களத்துடன் இயங்கி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நான்காவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் தற்போது நெல்சனுக்கு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்பதும் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படம் தொடர்பாக 22.08.2022 அன்று, 11 மணியளவில் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தற்போது ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, நாளை ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தின் ஷூட்டிங், சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நாளை ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இதனிடையே, ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது பற்றியும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து  ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சிந்துபாத், ஆடை, டாக்டர், குலு குலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் கார்த்திக் கண்ணன் தான் தற்போது ஜெயிலர் ஒளிப்பதிவாளராக பணிபுரிய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

ஏற்கனேவே, நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay kartik kannan to be cameraman for jailer movie sources

People looking for online information on Anirudh Ravichander, Jailer Movie, Nelson Dilipkumar, Rajinikanth, Sun pictures, Vijay Kartik Kannan will find this news story useful.