சென்னை: பிரபல தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்கள் திருமணம் செய்துள்ளனர்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம்.
குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, இளவரசு, ரெட்டின் கிங்க்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்தார்.
விஜய் கார்த்திக் ஏற்கனவே டார்லிங்க-2, சில்லுக்கருப்பட்டி, சிந்துபாத், காத்துவாக்குல ரெண்டு காதல், இரவாக்காலம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் சக ஒளிப்பதிவாளர் யாமினியை இன்று சென்னையில் திருமணம் செய்ய உள்ளார். யாமினி யாக்ன மூர்த்தி சாணி காயிதம், சில்லுக்கருப்பட்டி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
சமீபத்தில் கூட டாக்டர் படத்தின் ஒளிப்பதிவை யாமினி டிவிட்டரில் பாராட்டி இருந்தார். அதில் விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவையும் படக்குழுவையும் பாராட்டினார்.