இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்..? வைரலாகும் முதல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

Advertising
>
Advertising

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  காஷ்மீரில் நிறைவடைந்து.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே விஜய், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தும் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல் பதிவாக விஜய் பகிர்ந்துள்ளார்.

Tags : Vijay, Leo

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Joined in Instagram Checkout His First Post

People looking for online information on Leo, Vijay will find this news story useful.