கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.
இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.
Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பொங்கலுக்கு (11.01.2023) இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்னுடைய தம்பி விஜய் சினிமாவில் வர அப்பா எஸ்.ஏ.சி. பெரிய காரணம். அவர் உதவியிருக்கிறார். இன்றைக்கு விஜய் தமிழ் திரையுலகில் உயர்ந்த நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது விஜய்யின் உழைப்பு தான். அப்பா பாரதிராஜாவோடு இன்று காலை நடைபயிற்சி சென்ற போது "விஜய் என்ன மாதிரி டான்ஸ் ஆடுறான்டா" என்று பாரதிராஜா பாராட்டுகிறார். விஜய் போல நடனம் ஆட இந்தியாவிலேயே வேறு நடிகர்கள் கிடையாது" என விஜய் குறித்து சீமான் பேசினார்.