கூலாக என்ட்ரி.. 'ரஞ்சிதமே' ஸ்டைலில் விஜய் கொடுத்த FLYING KISS தான் இப்போ ட்ரெண்டிங்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் இதற்கு முன்பு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! ‘இந்த வார’ எலிமினேஷனை அறிவித்த கமல்ஹாசன்..! bigg boss 6 tamil

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதற்கு மத்தியில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்கென பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த்  உடனிருந்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் உள்ளிட்டோருடன் சந்திப்பு நடத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அடுத்தடுத்த வாரங்களில், நடிகர் விஜய் பிற மாவட்ட ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருப்பதாக தெரிகிறது. தொடர்ச்சியாக பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பிறகு, தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ள விஜய், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் வந்த நடிகர் விஜய், ரசிகர்களுக்கு வாரிசு படத்தில் வரும் 'ரஞ்சிதமே' பாடல் ஸ்டைலில் Flying Kiss கொடுத்தது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க வந்த விஜய், மிகவும் கூலாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். அந்த சமயத்தில், அனைவருக்கும் 'ஹாய்' சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே வந்த விஜய், திடீரென ரஞ்சிதமே பாடலில் வருவது போல 'Flying Kiss'ஐயும் கொடுத்தார். இதனை கண்டதும் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் கூட ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | தெலுங்கு நடிகர் நாக சவுர்யா & அனுஷா ஷெட்டிக்கு டும்டும்.!!.. ரசிகர்கள் வாழ்த்து Naga Shaurya Anusha Shetty Wedding

கூலாக என்ட்ரி.. 'ரஞ்சிதமே' ஸ்டைலில் விஜய் கொடுத்த FLYING KISS தான் இப்போ ட்ரெண்டிங்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay flying kiss in ranjithame varisu style to fans

People looking for online information on Ranjithame Song, Varisu, Vijay, Vijay fans will find this news story useful.