இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் பிரபல சிவன் கோயிலில் பசு மாட்டிற்கு பூஜை செய்துள்ளார்.
Also Read | மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு.. குஷ்புவை வாழ்த்தி மெகாஸ்டார் ட்வீட்.!
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்துள்ளார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி பின்னர் பசு மாட்டிற்கு பூஜை செய்து புத்தாடை (வேட்டி துண்டு) அணிவித்தார். அப்போது இந்துக்களின் நம்பிக்கையான ஶ்ரீ தேவி குடியிருப்பதாக கருதப்படும் பசுமாட்டின் பின் பகுதியை வணங்கி, பசு மாட்டின் வாலில் ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர், "எனக்கு மட்டும் நான் பிரார்த்தனை செய்யவில்லை. எனது மகன் விஜய்யின் குடும்பம் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் சேர்த்து தான் பிராத்தனை செய்தேன்" என சந்திரசேகர் கூறினார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் ராமேஸ்வர வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன
Also Read | LEO LEO LEO.. செம்ம ஸ்டைலா.. கெத்தா.. வைரலாகும் பிக்பாஸ் விக்ரமனின் போட்டோ ஷூட் வீடியோ!