''தளபதியே ஒரு பாக்கியம்'' - விஜய்யின் TRP சக்சஸ்.. ரசிகர்களின் போஸ்டர் செம வைரல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் ரசிகர்களை அவரை வாழ்த்தி வைத்துள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.  

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் TRP வெற்றியை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு போஸ்டர் அடித்துள்ளனர். இந்த லாக்டவுனில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான விஜய்யின் திரைப்படங்களுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று தெறி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை வாழ்த்தி வடிவமைத்துள்ள போஸ்டரில், ''தாய்மார்களுக்கு சன் டிவி ஒரு வாக்கியம், சன் டிவிக்கே தளபதி ஒரு பாக்கியம். மேலும், TRP என்பதற்கு, தளபதி ராஜ்ஜியம் பார்த்துக்கோ என புது அர்த்தம் கொடுத்த அசத்தியிருக்கிறார்கள். இதையடுத்து இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

Tags : Vijay, Theri, Sun TV, TRP

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் ரசிகர்கள் அடித்த பேனர் இணையத்தில் வைரல் | Vijay fans recent poster on his TRP success is going viral

People looking for online information on Sun TV, Theri, TRP, Vijay will find this news story useful.