இந்தியா சீனா இடையே நடந்த போரில் தாய் திருநாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் இந்திய ராணுவ வீரர் பழனி .

இந்த வருடம் தளபதி விஜய்யின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று மாநில பொறுப்பாளர் புஸ்ஸீ N.ஆனந்த் ரசிகர்களிடம் எடுத்துக் கூற, மாநில பொறுப்பாளர் அந்தச் செய்தியை அனைத்து மாவட்ட தலைவர்களிடம் விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் போஸ்டர் பேனர் பேப்பர் விளம்பரம் நலதிட்டங்கள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விஜய்யின் கோரிக்கையின்படி இந்த வருடம் தேனியில் விஜய்யின் பிறந்தநாள் விழா நிகழ்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் போன்றவற்றுக்கு பதில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை ராமநாதபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை இணைந்து ரூ. 1,00,000/- (ஒரு லட்ச ரூபாய்க்கான) ரூபாய்கான DD-யை அவரது மனைவி P.வானதி தேவி அவர்களிடம் வழங்கப்பட்டது.
விஜய் ரசிகர்களின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.