PAKKA மாஸ் தேதியில் ரிலீசாகும் விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், அனன்யா நடிக்கும் PAN INDIA "LIGER" படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில்  இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

Advertising
>
Advertising

குத்து சண்டை வீரர் மைக் டைசன், LIGER படத்தில் நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில்  பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 இந்த படத்தின் அமெரிக்க படப்பிடிப்பு இன்றுடன் (30.11.2021) நிறைவடைந்ததாக ப்டக்குழு அறிவித்துள்ளது.  அமெரிக்காவில் மைக்டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. விடைபெற்ற படக்குழுவுக்கு மைக்டைசன் விருந்தளித்து பிரியாவிடை கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த படம் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதே ஆகஸ்ட் 25 ஆம் நாளில் தான் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் கிளிம்ஸ் முன்னோட்டம் டிசம்பர் 31 அன்று வெளியாக உள்ளது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா

தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions

ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா

கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா

படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்

சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Deverakonda starrer Liger to release on 25 8 2022

People looking for online information on Ananya Pandey, அர்ஜூன் ரெட்டி, பூரி, பூரி ஜெகன்நாத், ரம்யா கிருஷ்ணன், லைகர், விஜய் தேவரகொண்டா, Liger, Puri Jagannath, Ronith Roy, Vijay Devarakonda will find this news story useful.