VIJAY DEVARAKONDA: "இந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கணும்" - விஜய் தேவரகொண்டா விருப்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதுமே பிரபலமானார்.

Advertising
>
Advertising

Also Read | “எனக்கு மட்டும் ஏன் சொல்லித் தர மாட்றீங்க” - இளையராஜாவிடம் கேள்வி கேட்ட கார்த்திக் ராஜா.!

குறிப்பாக தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா அண்மையில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லைகர். ஆகஸ்ட் 25 ம் தேதி திரையரங்கிளில் வெளியான இப்படத்தை பிரபல பிரம்மாண்ட கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெயகாந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் துபாயில் நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய டி20 கோப்பை போட்டியை நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் காணச் சென்றுள்ளார். இந்த இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் தமது 100வது டி20 போட்டியில் கோலி விளையாடினார்.  இந்த போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனிடையே இந்த போட்டி நடைபெறும் இடத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, நடந்துகொண்டிருந்த அந்த போட்டியில் விராட்கோலி குறைந்தது 50 ரன்களாவது எடுப்பார் என்று நம்புவதாக முதலில் தெரிவித்து பேசினார். அவருடைய உற்சாகமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் குஷியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவிடம் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதன்படி, “எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உங்களுக்கு ஆசை?” என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, எம். எஸ் தோனியின் பயோபிக்கில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ஏற்கனவே நடித்துவிட்டார். எனவே தான் நடிக்க வேண்டுமென்றால், விராட் கோலியின் பயோபிக் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Also Read | "உங்க பாட்டுலயும் இப்படி இருக்கு" - ராஜா கிட்ட Thuglife.. கார்த்திக் ராஜா சொன்ன சுவாரஸ்யம்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda wants to act in Virat Kohli BioPic

People looking for online information on INDvsPAK, Vijay Devarakonda, Virat Kohli will find this news story useful.