சிரஞ்சீவி & சல்மான் கானை சந்தித்த விஜய் தேவரகொண்டா.. கூட இவர் வேற இருக்காரா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | பழைய யுவன் வந்தாச்சு.. U1 குரலில் வெளியான 'Love Today' படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'.

இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

காட்ஃபாதர்  படத்தை மோகன் ராஜா இயக்க, ஆர்.பி.சௌத்ரி மற்றும் என்.வி.பிரசாத் தயாரிக்க, கொனிடேலா சுரேகா வழங்குகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த ஆண்டு தசராவுக்கு காட்பாதர் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் ஆகியோர் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானை சந்தித்துள்ளனர். LIGER படத்தின் வெளியீட்டை ஒட்டி இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 'லைகர்' திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read | சூப்பர் ஹிட்டான'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்.. ஜான்வி கபூர் நடத்திய போட்டோஷூட்! வைரல் Photos!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Meets Salman Khan Chiranjeevi at Godfather Set

People looking for online information on Chiranjeevi, Godfather, Salman Khan, Vijay Devarakonda will find this news story useful.