"சிங்கத்துக்கும் புலிக்கும் பொறந்தவன்டா".. LIGER படத்தின் மிரட்டலான டிரெய்லர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கும் LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: "வாரிசு படத்தில் விஜய்யோட பேரு இது தானா??.." அதிரடி 'Update'.. "கூடவே இன்னொரு சர்ப்ரைஸும்.."

விஜய் தேவரகொண்டா நடித்த மாஸ் பொழுதுபோக்கு எண்டர்டெய்னரான  லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் டிரெய்லர் இன்று ஜூலை 21 வெளியாகி இருக்கிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கும்  பான் இந்தியா படம் என்பதால், டிரெய்லர் வெளியீட்டு விழாவை தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் இணைந்து நடத்த, தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி ஹைதராபாத் நிகழ்வு RTC X சாலையில் உள்ள சுதர்சன் தியேட்டரில் இன்று காலை 9:30 மணிக்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது, அடுத்த மும்பை நிகழ்வு அந்தேரியில் உள்ள சினிபோலிஸில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

டீஸர், போஸ்டர்கள் மற்றும் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

டிரெய்லரில் திக்கு வாய் உடைய நபராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, மைக் டைசன் ஆகியோர் தோன்றியுள்ளனர்

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read | "சர்தார்" படத்துக்காக களமிறங்கிய கார்த்தி.. இயக்குனர் P.S.மித்ரன் வெளியிட்ட ஜாலியான வீடியோ!

"சிங்கத்துக்கும் புலிக்கும் பொறந்தவன்டா".. LIGER படத்தின் மிரட்டலான டிரெய்லர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda LIGER Saala Crossbreed Movie Trailer Released

People looking for online information on Ananya Panday, Liger Movie, LIGER Movie Trailer Release, Ramya Krishna, Vijay Devarakonda will find this news story useful.