விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே நடிக்கும் LIGER படத்தின் தெறி ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

குத்து சண்டை வீரர் மைக் டைசன், LIGER படத்தில் நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் அமெரிக்க படப்பிடிப்பு இன்றுடன் (30.11.2021) நிறைவடைந்ததாக ப்டக்குழு அறிவித்துள்ளது.  அமெரிக்காவில் மைக்டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படக்குழுவுக்கு மைக்டைசன் விருந்தளித்து பிரியாவிடை கொடுத்துள்ளார்.

இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில்  பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Liger Movie America Schedule Wrapped

People looking for online information on Liger, Vijay Devarakonda will find this news story useful.