லோக்கல் ரயிலில் பயணம் செய்த விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே! இதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த வீடியோ & புகைப்படங்கள் பரவி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | உலகச் சுற்றுலாவில் பூஜா ஹெக்டே.. அடுத்த நாடு இதுதானாம்! LATEST போட்டோவுடன் சொன்ன தகவல்

விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் வெளியீட்டை தொடர்ந்து படக்குழு பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.‌

அதில் ஒரு பகுதியாக காஃபி வித் கரண் நிகழ்வில் விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே சில நாட்களுக்கு முன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்து படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் விஜய் தேவரகொண்டா &  அனன்யா பாண்டே பங்கெடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரயில் பயணத்தில் அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து விஜய் தேவரகொண்டா சிறிது நேரம் பயணம் செய்தார்.இருவரும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து காட்சியளித்தனர்.

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சந்திரமுகி-2 படத்தின் ஷூட்டிங்.. ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு! செம போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Ananya Panday Travelled Mumbai Local Train for LIGER

People looking for online information on Ananya Panday, Liger Movie, Mumbai local train, Vijay Devarakonda, Vijay Deverakonda will find this news story useful.