விஜய் தேவரகொண்டா ங லைகர் படத்தின் தமிழக தியேட்டர் திரைகளின் எண்ணிக்கை அறிவித்துள்ளது.
Also Read | ஷங்கர் இயக்கும் 'இந்தியன் - 2'.. படத்துல நடிகர்கள் யார் யாரெல்லாம் நடிக்கிறாங்க? முழு விவரம்
லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 25, 2022) ன உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படம் ஏற்கனவே சென்சாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார். பிரபல உலக குத்துசண்டை வீரர் மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் நாளை 400 திரைகளில் வெளியாகும் என ஆர்.கே. சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்.
Also Read | PS1 பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. வெளியான ஆதித்த கரிகாலன் விக்ரமின் தெறி மாஸ் வீடியோ!