“LOVE MARRIAGE பண்ண மாதிரியே தெரிலயே..” - அம்மாவ CUTE-ஆ கலாய்ச்ச விஜய் 😍 EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்.

Advertising
>
Advertising

Also Read | மலையாள பட போஸ்டரில் ப்ரியதர்ஷன் செய்த விஷயம்..! நெகிழ்ந்த “8 தோட்டக்கள்” இயக்குநர்.!  

அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். முன்னதாக தனக்கே உரிய தனித்துவமான அடையாளங்கள் இருந்தாலும், விஜய்யின் அம்மா ஷோபா என தன்னை அறிமுகம் செய்வதிலேயே தான் பெருமிதம் கொள்வதாக கூறியவர், தன் திருமண வாழ்வு குறித்து பேசினார்.

அதன்படி, தனது தந்தை இந்து - தனது தாயார் கத்தோலிக்க கிறிஸ்தவர் என்றும், அதேபோல், தனது கணவர் கத்தோலிக்க கிறிஸ்தவர் என்றும், தான் இந்துவாக இருந்து திருமணத்துக்கு பின் மதம் மாறியதாகவும் குறிப்பிட்ட ஷோபா சந்திரசேகர், தனது தந்தை டிராமா ட்ரூப் வைத்திருந்ததாகவும், அப்போது பணி நிமித்தமாக Paying Guest-ஆக வந்த எஸ்.ஏ.சந்திரசேகர் நிரந்தர Guest-ஆகிவிட்டதாக ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தாயார் சொல்லிதான், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டதாகவும், அப்போது தனக்கு சிறிய வயது தான் என்றும், சேகர் மாமா.. சேகர் மாமா என்றே சொல்லிக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இன்றும் விஜய் தன்னைப் பார்த்து, “என்னம்மா நீங்களும் உங்க லவ்வும், பீச்க்கு போகல, சினிமாவுக்கு போகல.. ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரியே தெரியலயே” என விளையாட்டாக கிண்டல் அடிப்பார் என்று தெரிவித்த ஷோபா சந்திரசேகர், “ஒரு வயதுக்கு பிறகு என் தாயார் எங்களை கண்டிப்புடன் நடத்தினார். பின்னர் என் தாயாரின் உறுதுணையுடனேயே நான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் ஐ லவ் யூ சொல்லவில்லை, ப்ரொபோஸ் செய்யவில்லை. ஆனால் அவர் என்னை சைலண்ட்டாக லவ் பண்ணினார் என நினைக்கிறேன். நான் கேட்டதில்லை, அவரை பிடிக்கும்” என தெரிவித்தார்.

Also Read | RRR : இந்த பாட்டுல இதே கெட்டப்ல ராஜமௌலி ஆடிருக்காரா?.. நடன இயக்குநர் பகிர்ந்த செம BTS

“LOVE MARRIAGE பண்ண மாதிரியே தெரிலயே..” - அம்மாவ CUTE-ஆ கலாய்ச்ச விஜய் 😍 EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Cute comments on Shoba Chandrashekhar Love Video

People looking for online information on Leo, Shoba Chandrashekhar, Thalapathy 67, Varisu, Vijay will find this news story useful.