பிரபல முன்னணி தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் 'பீஸ்ட்'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்த பீஸ்ட் படம் பிரபல டிவி சேனலில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் 'கேப்டன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்தார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்தனர். பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும் பெற்றது.

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.

பீஸ்ட் படம் பிரபல சன் நெக்ஸ்ட் தளத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் சன் டிவி நெட்வொர்க்கின் தெலுங்கு மொழி சேனலான ஜெமினி தொலைக்காட்சி சேனலில் விரைவில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவை ஜெமினி சேனல் வெளியிட்டுள்ளது.

 

Also Read | PONNIYIN SELVAN PS1 படத்தின் 2வது சிங்கிள்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆதித்த கரிகாலனின் வெற்றிக் கீர்த்தனை!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast World Television Premiere on Gemini TV

People looking for online information on Beast, Gemini tv, Vijay, Vijay Beast Television Premiere will find this news story useful.