'PRINCE' படத்தில் தளபதி விஜய்யின் 'BEAST' பட ரெஃபரன்ஸ்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன்,  நடித்த 'PRINCE' படத்தில் பீஸ்ட் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.

Vijay Beast Reference in SivaKarthikeyan Prince Movie
Advertising
>
Advertising

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவான 'ப்ரின்ஸ்' படம் இன்று வெளியாகி உள்ளது.

Vijay Beast Reference in SivaKarthikeyan Prince Movie

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் மூலம் இந்த படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 427 திரையரங்க திரைகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.

அதிகாலை 4 மணி முதல் சிறப்பு காட்சிகள் தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் திரையிடப்பட்டது. இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் ப்ரின்ஸ்  சிவகார்த்திகேயனின் ரிங் டோனாக ஒலிக்கிறது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Reference in SivaKarthikeyan Prince Movie

People looking for online information on Beast, Prince, Prince FDFS, Sivakarthikeyan, Vijay will find this news story useful.