பீஸ்ட் FDFS: "நெல்சன் சொன்னத விட"… "தளபதி இறங்கி கலாய்க்குறாரு" - BEAST PUBLIC REVIEW!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

பீஸ்ட்…

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்த நிலையில் தற்போது காலை சிறப்புக் காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் முடிந்துள்ளது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

பிஸ்ட் குழு…

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் பீஸ்ட் திரைப்படத்தை டாக்டர் திரைப்படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கியுள்ளார் .

பீஸ்ட் ரிலீஸ்…

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. தெலுங்கில் விஜய் 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். மலையாளத்தில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.

திரை தீ பிடித்தது…

பீஸ்ட் பட பாடலில், வருவது போல் ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டத்தால் திரை தீ பிடித்தது என்றே சொல்லலாம். ஆம், இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், முதல் காட்சியான, சிறப்புக் காட்சியை ரசிகர்கள் பார்த்து முடித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படம் பற்றிய தங்கள் கருத்துகளை பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்குப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில்,  "நெல்சன் சொன்னத விடவும் தளபதி இறங்கி கலாய்க்குறாரு" என்பன பல கமெண்டுகளை ஜாலியாக பேசியுள்ளனர் (வீடியோ இணைப்பில்).

பீஸ்ட் FDFS: "நெல்சன் சொன்னத விட"… "தளபதி இறங்கி கலாய்க்குறாரு" - BEAST PUBLIC REVIEW! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast movie FDFS public Review viral video

People looking for online information on Anirudh, Beast FDFS, Nelson, Vijay will find this news story useful.