சென்சாரான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம்!எத்தனை மணி நேரம் ஓடும்? வெளியான செம MASS தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'பீஸ்ட்' படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாளுக்கு முன்னதாக ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 155 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 2 மணி நேரம் 35 நிமிடங்கள் பீஸ்ட் படத்தின் நீளம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 200 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.  பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை படக்குழு 19.03.2022 அன்று வெளியிட்டு உள்ளது. ஜாலியா ஜிம்கானா எனும் பாடலை விஜய் பாடி, கு.கார்த்திக் எழுத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Movie Censored CBFC Rating & Running Time

People looking for online information on பீஸ்ட், Beast, Beast Release, CBFC, Censored, Running time, UA, Vijay will find this news story useful.