நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி65 திரைப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் ‘வேற லெவலில்’ நடனப் பயிற்சிகளை அளிப்பார் என்று சொல்லப்பட்டதை அடுத்து, அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனிடையே ஷங்கர் மற்றும் ராம் சரண் இணையும் #RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்துக்கும் ஜானி மாஸ்டர் தான் நடனப்பயிற்சி அளிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜானி மாஸ்டர், “பாய்ஸில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுள் ஒருவராக பின்னணி டன்சராகவும், முக்காபுல்லா பாடலில் ஸ்டேஜ் டான்ஸராகவும் ஷங்கர் சார் படத்தில் பணிபுரிந்தேன். இப்போது, எனது ஃபேவரைட் ஷங்கர் சார் இயக்கும் படத்திற்கு முக்கிய நடன இயக்குனர். ஹீரோ #RamCharan .. # RC15.. நம்பமுடியாததாக உணர்கிறேன். என்னை நம்பியதற்கு நன்றி சார்.” என குறிப்பிட்டுள்ளார்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோரால் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.
ALSO READ: ஷங்கரைத் தொடர்ந்து #RAP019 ஷூட்டிங்கில் மூத்த தமிழ் இயக்குநர்!.. Trend ஆகும் ஃபோட்டோஸ்!