BREAKING: 'BEAST' படத்தின் மிக முக்கிய உரிமையை கைப்பற்றிய இந்தியாவின் முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முக்கிய உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Advertising
>
Advertising

BREAKING: வலிமை-க்கு பின் அஜித்குமார் - H வினோத் இணையும் #AK61 படத்தின் ஷூட்டிங் எப்போ? வேற மாரி அப்டேட்!

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக பிரத்யேக BTS புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலா வாங்கி உள்ளார், இவர் தனது நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் இந்தி சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளார்.

நெகிழ வைக்கும் நடிகர் கார்த்தி! 10 ரூபாய்க்கு வயிறார சாப்பாடு

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Hindi Remake rights acquired by Sajid Nadiadwala

People looking for online information on Beast, Beast Movie, Beast Remake, Nelson, Sun pictures, Vijay, Vijay Movie will find this news story useful.