கொஞ்சம் கூட குறையாத CRAZE.. 7 நாளில் 7 கோடி வியூஸ்.. தெறிக்கவிடும் அரபிக் குத்து பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 21, பிப்ரவரி, 2022: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Advertising
>
Advertising

Beast - அரபிக் குத்து

இந்த திரைப்படத்தில் அண்மையில் வெளியான பாடல் அரபிக் குத்து. இந்த பாடல் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த பாடல் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புரோமோவில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இந்தப் பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பீஸ்ட் முதல் சிங்கிள்

முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார், விஜய் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். தளபதி விஜயின் 65வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அரபிக் குத்து பாடலை எழுதி இருக்கிறார்.

அரபிக் குத்து வெளியீடு

முன்னதாக இந்த பாடல் குறித்து விஜய்யிடம் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் பேசுமாறு வெளியான அந்தப் புரோமோவில் அரபிக் மற்றும் குத்து இரண்டையும் கலந்து அரபிக் குத்து என்கிற புதிய பாடலை தரலாம் என்று அனிருத் நெல்சனிடம் சொல்ல, பின்னர் இந்த பாடல் பற்றி மூவரும் நடிகர் விஜய்க்கு போன் பண்ணி சொல்வது போல் அமைந்தது அந்த புரோமோ. இப்படி எப்போதும் ஜாலியாக இருக்கும் இந்த டீம் மிகவும் பாசிட்டிவாக, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.

இந்தப் பாடல் வெளியான முதலாகவே மில்லியன் கணக்கான பார்வைகளை தாண்டி இந்த பாடல் சக்கைபோடு போட்டது. ரசிகர்களால் அதிகம் முணுமுணுக்கப் பட்டு வரும் பாடலாக தற்போது அரபிக் குத்து என்கிற பாடல் இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலில் வரும் ஹலமதி ஹபி போ என்கிற வரிகள் மிகவும் டிரெண்ட் ஆகி உள்ளன.

7 நாட்களில் 7 கோடி

இதனிடையே இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பீஸ்ட் - அரபிக் குத்து பாடல் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில் சுமார் 70 மில்லியன் பார்வைகளை தாண்டி, இந்த பாடல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது 7 நாட்களில் 7 கோடி பார்வையாளர்களை இந்த பாடல் சென்றடைந்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் தற்போது பிரத்தியேகமாக அறிவித்திருக்கிறது.

Also Read: "வராததை நான் ஏன் டிரை பண்ணனும்?" .. வலிமை இயக்குநர் H.வினோத் ஜாலி பேட்டி! Exclusive Part-1

Also Read: "வலிமை அஜித்-க்கு பண்ண கதையா?".. இயக்குநர் H.வினோத் பேட்டி! Exclusive Part-2

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Arabic kuthu song 70 million views in 7 days

People looking for online information on Arabic Kuthu, Beast, ThalapathyVijay, Vijay will find this news story useful.