மில்லியன் வியூவ்ஸை கடந்த விஜய்யின் பீஸ்ட் சிங்கிள்.. அரபிக் குத்து .. VIJAY | BEAST | ARABIC KUTHU | HALAMATHI HABI BOO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai, 14, பிப்ரவரி 2022: கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

Vijay Beast Arabic Kuthu halamathi habi boo பீஸ்ட் அரபிக் குத்து
Advertising
>
Advertising

தளபதி 65

இவரது இயக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இபப்டத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அரபிக் குத்து' பாடல் தற்போது வெளியாகி, மில்லியன் கணக்கான பார்வைகளை வெளியான சிறிது நேரத்திலேயே பெற்றுவருகிறது.

Vijay Beast Arabic Kuthu halamathi habi boo பீஸ்ட் அரபிக் குத்து

பீஸ்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் கிங்ஸ்லி, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் , வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரபிக் குத்து

இதனிடையே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியுள்ளது. முன்னதாக இந்த பாடல் உருவான விதம் குறித்த ஜாலியான் ப்ரோமோ வெளியாகி வைரலானதுடன், பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் தான் பிப்ரவரி 14-ஆம் தேதி பாடல் வெளியாகியதுடன் ரசிகர்கள் மத்தியில், பாடல் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

halamathihabiboo

4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடல், பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான, முதல் 40 நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையை தாண்டியுள்ளது. ‘ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி’ என தொடங்கும் இந்த பாடலின்  ஹலமதி ஹபிபோ (halamathihabiboo) என்கிற வார்த்தைகள் அனுபல்லவியாக ரிப்பீட் ஆகின்றன.

இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை இயக்கும் நெல்சன்

இதனிடையே இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் 179 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தையும் பீஸ்ட்,  அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Also Read: 2 பேருமே 90S கிட்ஸ் ஃபேவ்ரைட்.. ஆனா முதல் முறை தமிழ் படத்தில் இணையும் மோகன் & குஷ்பு.. பின்னணி என்ன? Exclusive தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Arabic Kuthu halamathi habi boo பீஸ்ட் அரபிக் குத்து

People looking for online information on Arabic Kuthu, Beast, Halamathi habi boo, Thalapathy Vijay, ThalapathyVijay, Vijay will find this news story useful.