லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா நோயின் பரவலால் இந்த படத்தின் வெளியீடு தடைபட்டிருக்கும் நிலையிலும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
’தளபதி 65’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் பணியாற்ற உள்ளார் என்று முன்பு ஒரு செய்து உலவியது. இந்நிலையில் தமன் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதை உறுதி செய்திருக்கிறார். 3 வருட உழைப்புக்கு பிறகு இந்த வாய்ப்பு சாத்தியப்பட்டிருப்பதாக தமன் தெரிவித்தார்.
தெலுங்கு திரையுலகில் தற்போது படுபிசியாக இருக்கும் தமன் தமிழில் ஒஸ்தி, ஈரம், நாணயம், சேட்டை ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன.