தெறிக்க ...தெறிக்க... வெளியான விஜய் ஆண்டனி அடுத்த பட மாஸ் FIRSTLOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ஆண்டனி: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அண்மையில் கோடியில் ஒருவன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertising
>
Advertising

கோடியில் ஒருவன்

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததை அடுத்து, விஜய் ஆண்டனி படக்குழுவினருடன் ஒரு வெற்றி விழா மீட்டிங்கிலும் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “என்னுடைய திரைப்படங்களும், இயக்குனர்களும், அவர்களுடைய கதையும், உழைப்பும்தான் என்னுடைய வெற்றிக்கும் காரணம்.” என்று பேசியிருந்தார்.

தமிழ்ப்படம் இயக்குநருடன் அடுத்த படம்

இதனைத் தொடர்ந்து பிரபல தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு திரைப்படம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

Also Read: இரண்டு ஆண்டுகள் விடா முயற்சிக்கு பின் ஜல்லிக்கட்டு-ல இளம் பெண் வெற்றி!.. சசிகுமார் வாழ்த்து!

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பிலான இந்த திரைப்படத்திற்கான தலைப்பு விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும், அந்த படத்தின் தலைப்பு ‘ரத்தம்’ என் சூட்டப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே நாம் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ரத்தம் first look

அதன்படி, இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சூர் தயாரிப்பில், இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ரத்தம் என்று தலைப்பிடப்பட்டு, படக்குழுவினர் ஒரு first look போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளனர்.

ஏற்கனவே பிச்சைக்காரன், சைத்தான், எமன், திமிரு பிடிச்சவர்ன் என வித்தியாசமான தலைப்புகளிட்ட திரைபடங்களில் நடித்திருந்த விஜய் ஆண்டனி, தமது திரைப்பட படங்களின் தலைப்பை போலவே, கதையிலும் வெரைட்டி காட்டுவதில் ஆர்வம் உடையவர். 

ஆக்‌ஷன் த்ரில்லரோ?

முன்னதாக இயக்குநர் விஜய் ஆண்டனி கொலைகாரன் எனும் தலைப்பிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் படமான இந்த படம், நேர்த்தியான திரைக்கதைக்காகவும், இரவு நேர சஸ்பென்ஸ் காட்சிகளுக்காகவும் பாராட்டப்பட்டது.

அந்த வகையில் ரத்தம் திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு ஜனரஞ்சகமாக ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read: சிவகார்த்தியேகன் cousin .. அருவி, வாழ் படங்களின் இயக்குநரின் Viral திருமண Photos.. மணப்பெண் இவங்களா?

Vijay Antony Raththam first look Poster CS Amuthan

People looking for online information on Raththam first look, Raththam first look poster will find this news story useful.