‘தமிழ் படம்’ அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’… வெளியான சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய முக்கிய அப்டேட்டை இயக்குனர் சி எஸ் அமுதன் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பாரிஸில் உள்ள பிரபல 3D அனிமேஷன் ஸ்டுடியோவில் ராஜமௌலி… லேட்டஸ்ட் viral புகைப்படம்

விஜய் ஆண்டனி

தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி திடீரென்று ‘நான்’ திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராகியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது,  வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.  அவரது  படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில்  சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான  நடிப்பால், ரசிகர்கள்  மனதில் தனி இடத்தை பெற்றிருக்கிறார். 

ரத்தம்

இதற்கு சமீபத்திய பேருதாரணமாக " கோடியில் ஒருவன் " திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.  இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். விஜய் ஆண்டனியும், "தமிழ்படம்" புகழ் C.S.அமுதன் அவர்களும் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தா ஆண்டு நவம்பர் 25, 2021 பூஜையுடன் துவங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமுதனின் முந்தைய இரண்டு படங்களைப் போல நகைச்சுவை படமாக இல்லாமல் ‘ரத்தம்’ திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read | லிப்ரா ரவீந்தர் தயாரிப்பில் பரத் நடிக்கும் புதிய த்ரில்லர்… Title உடன் வெளியான ஃபர்ஸ்ட்லுக்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antony Ratham movie shoot wrapped

People looking for online information on ரத்தம், விஜய் ஆண்டனி, Raththam movie, Vijay Antony will find this news story useful.