WOW.. விஜய் ஆண்டனியின் BLOCKBUSTER ஹிட் படத்தின் SEQUEL.. வந்தாச்சு செம்ம அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், டிஷ்யூம், பூ உள்ளிட்ட திரைப் படங்களில் இயக்குனர் சசி.

கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் சசி இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து இசை அமைக்க, விஜய் ஆண்டனியுடன் இணைந்து சாட்னா டைட்டஸ் நாயகியாக நடித்து இருந்தார்.

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தாய்க்காக வேண்டிக் கொண்டு பிச்சை எடுக்கும் ஹீரோ, அதன் பின் சிலரால் சந்திக்கும் நெருக்கடிகளை இந்த படத்தில் கமர்ஷியலாக இயக்கி இருப்பார் இயக்குனர் சசி.

இந்த திரைப்படமும் சரி, இந்த திரைப்படத்தின் பாடல்களும் சரி எல்லாமே ஹிட் அடித்தன. பல படங்களில் இசையமைத்திருந்தாலும் ‘நான்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுத்ததும், தொடர்ந்து நான், சலீம் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி சைத்தான், அண்ணாதுரை, காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

கடைசியாக விஜய் ஆண்டனி, திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில்தான் விஜய் ஆண்டனி இசையமைத்து இயக்கவிருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2-வது பாகம் குறித்த தகவல்கள் வெளியானது.

அதன்படி பிச்சைக்காரன் 2-ஆம் பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்குகிறது என்று தகவல்கள் தெரியவந்துள்ளன. 

தற்போது இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, விஜய் ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார்.

யு/ஏ சென்சார் சர்டிபிஃகேட் வாங்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "ஆடும்போது மேல கை போட்டுட்டாரு".. "Night Hotel Room கதவ தட்னாங்க" - நடனக் கலைஞர் பிரியங்கா பேட்டி..

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Antony Pichaikaaran2 shoot update விஜய் ஆண்டனி

People looking for online information on Director sasi, Pichaikaaran, Pichaikaaran2, Sasi, Vijay Antony will find this news story useful.