"மனுசன் டைட்டிலுக்கே நாங்க ரசிகர்கள்!".. மாஸாக வெளியான விஜய் ஆண்டனி பட டைட்டில் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ஆண்டனி நடிப்பில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’.

vijay antony next movie titled as kolai official firstlook

விஜய் ஆண்டனி நடித்து எடிட்டிங் செய்த இந்த கோடியில் ஒருவன் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெளியிட்டிருந்தது. யு/ஏ சென்சார் சர்டிபிஃகேட் வாங்கியிருந்த இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியது.

vijay antony next movie titled as kolai official firstlook

இந்த திரைப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, தனஞ்செயன் சார், பங்கஜ் போஹ்ரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

vijay antony next movie titled as kolai official firstlook

இந்நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்திருந்த இன்ஃபினிட்டி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகும் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்துக்கான அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

அதன்படி சைத்தான், பிச்சைக்காரன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் என மிரட்டலான டைட்டில்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இந்த படத்துக்கு ‘கொலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. பாலாஜி குமார் இயக்கும் இந்த படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். 

தற்போது வெளியாகி இருக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக்கை பார்த்த பலரும், “விஜய் ஆண்டனி சார் எப்போதும் வித்தியாசமான டைட்டிலை வைக்கிறார்.. அவருடைய டைட்டிலுக்கு நாங்கள் ரசிகர்கள்!” என்று தொடர்ச்சியாக இணையத்தில் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் நடித்த, பிச்சைக்காரன் திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து, தற்போது பிச்சைக்காரன் படத்தை அடுத்த பாகத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதேபோல், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அக்னிச்சிறகுகள்’ திரைப்படமும் ரிலீஸ்க்காக தயாராகி வருகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antony next movie titled as kolai official firstlook

People looking for online information on Abdul Kalam, அக்னிச்சிறகுகள், BalajiKumar, Girish Gopalakrishnan, Kodiyil Oruvan, Kolai, KolaiFirstLook, KolaiMovie, Pichaikaaran, Vijay Antony will find this news story useful.