முகத்தில் ஏற்பட்ட காயம்.. அறுவைச் சிகிச்சை குறித்து முதல்முறையாக பதிவிட்ட விஜய் ஆண்டனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி, தமது உடல்நிலை குறித்து டிவிட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஒரே நாளில் உயிரிழந்த 3 திரைக்கலைஞர்கள்.! சோகத்தில் தமிழ் திரையுலகம்..

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் உள்ள லங்காவியில் நடைபெற்ற போது படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தமது உடல்நிலை குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது  தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் பத்திரமாக மீண்டு வருகிறேன்.தற்போது எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன்😊✋ எனது உடல்நிலையில் உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கும் நன்றி🙏❤️" என விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

Also Read | பீரியட் காமெடி-ட்ராமாவா ? சந்தானம் நடிக்கும்‘வடக்குப்பட்டி ராமசாமி’ - ஒன்லைன் இதுதான்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony tweet about His health condition

People looking for online information on Vijay Antony, Vijay Antony health condition, Vijay Antony tweet will find this news story useful.