VIJAY ANTONY : உடல்நிலை குறித்த தகவலுடன் பிச்சைக்காரன் -2 அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி, தமது உடல்நிலை குறித்தும் பிச்சைக்காரன்- 2 படம் குறித்தும் டிவிட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? முழு விவரம்

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

சில நாட்களுக்கு முன் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் உள்ள லங்காவியில் நடைபெற்ற போது படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தமது உடல்நிலை குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏அன்புக்கு நன்றி" என விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

Also Read | விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. மாறுபட்ட லுக்கில் பார்வதி பகிர்ந்த வைரல் BTS ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony Today Tweet Regarding His Health Condition

People looking for online information on Vijay Antony, Vijay Antony health condition, Vijay Antony tweet will find this news story useful.