விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன்-2 படத்தின் சூப்பரான ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர்.

Advertising
>
Advertising

2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது.பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது. இப்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியே இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது வரை 30 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுற்றதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தீபாவளி முடிந்த பின் மீண்டும் துவங்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2022ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Vijay Anthony Pichaikkaran 2 Movie Shooting Update

People looking for online information on Pichaikkaran2, Vijay Anthony will find this news story useful.