விஜய் ஆண்டனி நடிக்கும் "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்லயா? வெளியான BTS IMAGE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர்.

Advertising
>
Advertising

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘கோடியில் ஒருவன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி  " கொலை", பிச்சைக்காரன்-2 " மழை பிடிக்காத மனிதன் " போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் -2 படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாக சிலநாட்களுக்கு முன் தகவல்கள் தெரிவித்தன.

Infinity film ventures இந்த படத்தை தயாரிக்கிறது. Infiniti Film Ventures தயாரிப்பாளர்கள் கமல் போரா, G.தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர், இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியவேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கன்னட நடிகர்கள் தனஞ்செயா, பிரிதிவி அம்பார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நடுவே எடுத்த BTS குரூப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் இயக்குனர் விஜய் மில்டனுடன் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony Malai pidikatha manithan shooting at Goa

People looking for online information on சலீம் -2, மழை பிடிக்காத மனிதன், விஜயகாந்த், விஜய் ஆண்டனி, Salim, Vijay Anthony, Vijay Milton, Vijayakanth will find this news story useful.