நோட் பண்ணீங்களா? வாரிசு ட்ரைலரில் வரும் விஜய் மற்றும் சரத்குமார் படத்தோட டைட்டில்.! VARISU TRAILER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "அவரும் Biased-ஆ இருக்காரு". அப்போ விக்ரமன சுத்தமா புடிக்கல, ஆனா".. மைனாவிடம் பேசிய ADK

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. அதே போல, பல்வேறு சாதனைகளையும் இந்த ட்ரைலர் படைத்து வருகிறது.

படத்தின் ட்ரைலரில் வரும் காட்சிகளின் அடிப்படையில், சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும் நடித்துள்ளனர். மேலும் ஷாம், ஶ்ரீ காந்த் ஆகியோர் விஜய்யின் சகோதரர்களாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக டிரெய்லரில் தோன்றியுள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் & செண்டிமெண்ட் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க ஆட்ட நாயகன்" என்ற வசனம் டிரெய்லர் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், விஜய் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்த படங்களின் பெயர்கள், ட்ரைலரில் வரும் வசனங்களில் இடம் பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

"நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் கண்ணு தொறந்தே தான் இருக்கணும்" என சரத்குமார் பேசும் வசனம், வாரிசு ட்ரைலரில் வருகிறது. அதே போல, பிரகாஷ் ராஜ் பேசும் வசனத்தில், "வேடனுக்கு வேட்டை தொழில்" என குறிப்பிடுகிறார்.

இதில் சரத்குமார் சொல்லும் "வேட்டைக்காரன்" விஜய் நடித்த பட பெயர். பாபு சிவன் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய், அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதே போல, பிரகாஷ் ராஜ் பேசும் வசனத்தில் "வேடன்" என்ற வார்த்தை வரும். இது, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1993-ல் சரத்குமார் நடித்த படத்தின் பெயர். வேடன் படத்தில் குஷ்பு, சரத் பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படி வாரிசு படத்தின் நடிகர்களான விஜய் மற்றும் சரத்குமார் ஆகியோ நடித்த படங்களின் பெயரில் வரும் வசனங்கள் வைரலாகி வருகிறது.

Also Read | "அட, சூப்பர்ல".. வாரிசு ட்ரைலரில் இடம்பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. Varisu Trailer!!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay and Sarath kumar movie names in varisu trailer

People looking for online information on Sarath Kumar, Varisu Trailer, Vijay will find this news story useful.