BREAKING : விஜய்யின் 'தளபதி 63' டீமின் அடுத்த பிளான் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 63'. 'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய்யுடன் அட்லி இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் அப்பா - மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், மகன் விஜய்யின் பெயர் பிகில் என்றும் ஏற்கனவே எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து இந்த படத்தின் பிளாஸ்பேக் காட்சிகள் தற்போது ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ஜூலை முதல் வாரத்தில் ஷூட்டிங்கிற்காக டெல்லி செல்லவிருக்கின்றனராம். அங்கு 8 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறதாம்.

Vijay and Nayanthara's Thalapathy 63 team will go to Delhi for Shoot

People looking for online information on AR Rahman, Atlee, Nayanthara, Thalapathy 63, Vijay will find this news story useful.