என்னது..? மீண்டும் இணைகிறதா தளபதி விஜய் - அட்லி ஹிட் காம்போ..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். முதன்முறையாக ‘பிகில்’ படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹிட் படங்களை கொடுத்த இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பயோவில், ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ வரிசையில் ‘A5’ என அடுத்த திரைப்படத்தின் தற்காலிக பெயரையும் இணைந்திருந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவ.14ம் தேதி ‘மெர்சல்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த அட்லி சில நாட்கள் கழித்து ‘பிகில்’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் அதேபோல், இந்த ஆண்டு நவ.14ம் தேதி அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிகில்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில் சிவப்பு நிற ஜெர்சியில் 5ம் நம்பரில் நடிகர் விஜய் ‘பிகில்’ என்றும், அதே நம்பர் ஜெர்சியில் இயக்குநரும் அட்லியும் இருந்தனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அட்லி இயக்கும் அடுத்தப்படம் அவரது 5வது திரைப்படமாகும். ஆக தனது 5வது படத்திற்காக மீண்டும் தளபதி விஜய்யுடன் அட்லி கூட்டணி அமைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Vijay and Atlee to team up again for their next A5?

People looking for online information on A5, Atlee, Bigil, Mersal, Theri, Vijay will find this news story useful.