அஜித், விஜய் இணைந்து நடித்த படம் ரீ ரிலீஸ்.. வாரிசு VS துணிவு நடுவே பிரபல THEATRE-ன் சூப்பர் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "நாள் நெருங்க நெருங்க".. "எரிமலை எப்படி பொறுக்கும்".. Freeze ஆகி நின்ற ரச்சிதா?.. ADKவின் கமெண்ட் 😅!!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை போல, அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் துணிவு படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி, படத்தின் ரிலீஸ் மீதான காத்திருப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது. நிறைய சாதனைகளையும் இந்த ட்ரைலர் யூ டியூப் தளத்தில் படைத்து வருகிறது.

அஜித் மற்றும் விஐய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆக உள்ளதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி இருந்தது.

அதன் பின்னர், இருவரது படங்களும் தற்போது ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு அவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன "ராஜாவின் பார்வையிலே" திரைப்படம், இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபல இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் கார்த்தி.. வெளியான சூப்பர் தகவல்!!.. ஷூட்டிங் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay and Ajith movie rajavin parvaiyile re release in theatre

People looking for online information on Ajith Kumar, Rajavin Parvaiyile, Rajavin parvaiyile re release, Thunivu, Varisu, Vijay, Vijay and Ajith movie will find this news story useful.