தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா சந்திரசேகர் ஆகியோரின் மகனான நடிகர் விஜய் மாஸ் நடிகராகத் திகழ்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 உருவாகி வருகிறது. வம்சி பைடிபல்லி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்தில் அரபிக் குத்து என்கிற பாடல் பிரபலமானது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய் பற்றிய சுவாரசியமான பல தகவல்களை பகிரக் கூடிய பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு பேசி வருகிறார். ஒரு குட்டி ஸ்டோரி - கர்நாடிக் பாட்டு என்கிற இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் பற்றிய குட்டி ஸ்டோரிகளை சொல்லி வரும் ஷோபா, நடிகர் விஜய் குறித்த, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பல அரிய தகவல்களை கூறி வருகிறார்.
இதேபோல் குட்டி ஸ்டோரி முடிந்தபிறகு ஷோபா சந்திரசேகர் பாடிய கர்நாடக பாடல்கள், அவற்றின் குறிப்பு விபரங்களுடன் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில்தான் நடிகர் விஜய் பற்றி ஷோபா சந்திரசேகர் புதிய குட்டி ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் 5-வது எபிசோடில் தான் இந்த புதிய குட்டி ஸ்டோரியை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்திருக்கிறார்.
அதன்படி, “ஒரு ரசிகையாக தளபதி விஜய் நடித்த திரைப்படங்களை கட்டாயம் பார்த்து விடுவேன்.. விஜய் நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும், நான் மிகவும் ரசித்த படம் துப்பாக்கி. அந்த படம் எப்போது போட்டாலும் எனக்கு பிடிக்க கூடிய, நான் ரசிக்க கூடிய படமாக இருக்கும், அது ஏன் என்று தெரியவில்லை.
இதேபோல் பீஸ்ட் திரைப்படம் பார்த்துவிட்டு, விஜய்யிடம் ரிவியூ சொன்னேன். அவரோ முதல்நாள் கலவையான மதிப்பீடுகள் வரலாம்.. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் உண்மையான மதிப்பீடுகள் தெரியவரும் என சொன்னார்” என்று ஷோபா சந்திரசேகர் பகிர்ந்துள்ள இந்த குட்டி ஸ்டோரி இப்போது வைரலாகி வருகிறது. முழு வீடியோவை காண்பதற்காக லிங்க் இணைப்பில் உள்ளது.