”வீழ்த்த விதி இருந்தால்…? வழியும் இருக்கும்” …. ஹீரோவான புகழின் ஸ்டலைனான PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிரபலம் புகழ் பகிர்ந்துள்ள புகைப்படமும் அதற்கு கொடுத்துள்ள கேப்ஷனும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Advertising
>
Advertising

“கல்யாண ரேக எது?”… ஜோசியரிடம் ஆர்வமாக கேட்ட பிரியங்கா மோகன்! Funride பேட்டி!

புகழின் வளர்ச்சி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான். வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது, நடக்குவர்களிடம் சண்டை இழுப்பது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலக்கிய அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகள்வில் பகிரப்பட்டன.

சினிமாவில் கால்பதித்த மூவர்….

அந்த மூவரில் அஷ்வின் கதாநாயகனாக நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் ஜனவரி மாதம் வெளியானது.  சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் சினிமா மூலமாக அறிமுகமாகி நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுபோலவே புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமான் அஜித்தோடு அவர் நடித்த வலிமை படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி அவரது கதாபாத்திரத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இப்போது புகழ்  விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்களான எதற்கும் துணிந்தவன், யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோவான புகழ்….

சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளார். இவர் என்னவளே மற்றும் ஜூனியர் சீனியர் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக, சந்தானம் நடித்து வெளியாகி இருந்த 'டிக்கிலோனா' படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது.

கவனம் ஈர்த்த புகைப்படம்

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் புகழ் தற்போது ஸ்டைலான ஒரு  புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தோடு ‘உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் , விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும், தளறாதே, துணிந்து செல்...’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.

RRR Release: தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijat tv fame pugazh latest viral pic and caption

People looking for online information on குக் வித் கோமாளி, புகழ், விஜய் டிவி, CWC, CWC pugazh, Pugazh, Vijay Tv Pugazh will find this news story useful.