குசும்புக்கார மச்சினிச்சிங்க.. சிக்கிய COOK WITH COMALI ‘கனி’-யின் கணவர்! VIRAL அட்ராசிட்டி வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijayalakshmi: பிரபல சென்னை 28 மற்றும் அஞ்சாதே உள்ளிட படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி.

Advertising
>
Advertising

இவரது சகோதரி மற்றும் நடிகை தான் நிரஞ்சனி. நிரஞ்சனி சில வருடம் முன்பு துல்கர் சல்மான், ரீது வர்மா, விஜே ரக்‌ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அகத்தியனின் மகள்கள்

அஜீத் நடிப்பில் வெளியான காதல் கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் அகத்தியனின் மகள்களே இவர்கள் மூவரும். இவர்களுள் கனி, இயக்குநர் திருவின் மனைவி ஆவார். இயக்குநர் திரு நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

அந்த படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியை, பின்னர் நிரஞ்சனி திருமணமும் செய்துகொண்டார். நிரஞ்சனியின் மெஹந்தி விழா நேரத்தில் இந்த சகோதரிகளின் சங்கமத்தை காண முடிந்தது. எப்போது ஆக்டிவாகவும் துருதுருவென்றும் இருக்கும் இந்த சகோதரிகள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி 2வது சீசன் வின்னர்

இவர்களுள் கனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார். மேலும் அவர் பெங்குபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு கனியின் சமையலை டேஸ்ட் பண்ண நடிகர் சிம்பு அவர்களின் வீட்டிற்கு வருகை தந்த புகைப்படங்கள் வைரலாகி இருந்தன.

RRR: ஸ்டெப்பு முறையா விழணும்!.. பிரபல நடிகை.. ராம்சரண்-உடன் நாட்டு நாட்டு டான்ஸ்! வீடியோ

இயக்குநர் திரு-வின் விளையாட்டு..

முன்னதாக கனியின் கணவரும், இயக்குநருமான திரு, குக் வித் கோமாளியில் கனி பங்குபெற்ற டிவி நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து “உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு. எப்படி அவங்களுக்கெல்லாம் நீ சமைச்சு தர்றியோ அப்படி ஒருநாளாச்சும் எனக்கு சமைச்சு தரலாமே?” என்று கேட்க, இதற்கு கனி “அடப்பாவி பாவா புருஷா!” என்று க்யூட்டாக ரிப்ளை செய்திருந்தார்.

“நான் Dating-ல இல்ல.. குங்குமம் Shoot-க்காக.. Pregnant-ஆ?”.. Serial-ஐ விட்டு விலகினக்கு.. கடுப்பான நடிகை!

சகோதரிகள் அட்ராசிட்டீஸ்

இந்நிலையில், சகோதரிகள் மூவரும் சேர்ந்து இயக்குநர் திருவை கலாய்த்து அவருடனான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், சகோதரிகள் நிரஞ்சனி மற்றும் விஜயலட்சுமி இருவரும், “எங்க அக்காவோட அழகுக்கும் கலருக்கும் எத்தனயோ மாப்பிள்ளைங்க வந்தாங்க.. நான் தான் பிடிவாதமா இந்த மீசைக்கார்ரர் தான் வேணும்னு அடம் பிடிச்சேன்” என்கிற பிரபல வடிவேலு வசனத்தை இமிட்டேட் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குசும்புக்கார மச்சினிச்சிங்க.. சிக்கிய COOK WITH COMALI ‘கனி’-யின் கணவர்! VIRAL அட்ராசிட்டி வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijalakshmi Niranjani Kani thuglife director thiru video

People looking for online information on CookWithComali2, CookWithComali3, Director Thiru, Kani, Niranjan, Silambarasan TR, Vijayalakshmi will find this news story useful.