மான்ஸ்டர் படம் ஹிட்டடித்த பின்னர் எஸ்.ஜே சூர்யா ராதா மோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரொமான்ஸ் திரில்லர் ஜானரைச் சேர்ந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. லாக்டவுன் முடிந்தபின் விரைவில் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளாது,
‘அவர் நடிகர்களுள் ஒரு ஸ்டார். ஒவ்வொருமுறையும் தன்னுடைய நடிப்பால் ஆச்சரியப்படுத்துபவர். இந்த உலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் அவர் ஒருவர். விரைவில் உங்களை அதிகம் பார்க்க வேண்டும் சார்’ என்று வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.
இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்த எஸ்.ஜே.சூர்யா தனது நன்றியை விக்னேஷ் சிவனுக்குத் தெரிவித்தார்